பது/ஸ்ரீ கணேஷா த.வி. மீதும்பிட்டிய
ஊவா மாகாணத்தில் பசறை நகரில் இருந்து நான்கு மைல் தூரத்தில் இப் பாடசாலை அமைந்துள்ளது. இப்பாடசாலை ஆரம்பத்தில் பாலர் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரை மடடுமே கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இரு நேர பாடசாலையாகவே நடைபெற்றது. எம் ஜே சீமான்பிள்;ளை என்ற ஒரே ஒரு ஆசிரியர் கடமை புரிந்த 1958-1965ஆம் ஆண்டு காலத்திலும் 1965-1972 இல் எஸ் சபாரட்ணத்தின் காலத்திலும் 1976-1984ம் ஆண்டு வரை ஆர். குணமணி காலத்திலும் இப் பாடசாலை தோட்ட நிர்வாகத்தின் கீழே இயங்கியது. ஆர் குணமணியின் காலத்தில் கட்டிடம் தேயிலை தொழிற்சாலையின் அருகில் இருந்து பசறை குரூப்டி பிரிவின் 2ம் இலக்க தேயிலை பிரதேசத்திற்கு இடம்மாற்றப்பட்டது
இக் காலத்தே தமிழ் பாசைஇ எழுத்துஇ சூழல் ஆகிய பாடவிதானங்கள் மட்டுமே நடைமுறையிலிருந்தன. தோட்ட முகாமையாளர் எப்போதாவது பாடசாலையை மேற்பார்வை வி;;ஜயம் செய்தார். 1985.02.21ம் திகதி திருமதி.எஸ் சுந்தரமபாள் அதிபரின் காலத்திலேயே அரசு இப் பாடசாலையை பொறுப்பேற்றது. முறையான மேற்பார்வையின் கீழ் வகுப்புகளும் உயர்த்தப்பட்டு பசறை இல1 தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டதோடு பின்பு பண்டாரவளை கல்வி வலயத்திற்கு உள்வாங்கப்பட்டது.
அக் காலத்தில் மூன்று ஆசிரியைகள் மட்டுமே காணப்பட்டதால் பாடசாலையின் விலையாட்டுப் போட்டியை இளைஞர் சேவைகள் கழகம் நடத்தித் தந்தமையும் பெற்றோர்களுடன் மைதானம் வெட்டி விழா நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருமதி.எஸ் சுந்தரம்பாள் ஆசிரியையாக 1976.05.24ம் திகதி முதல் நியமிக்கப்பட்டு 1984ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டுவரை அதிபராகவும் கிட்டதட்ட 21 வருட காலம் அரும்பணி புரிந்தமை மெச்சத்தக்கது.
1997ம் ஆண்டு காலத்தே பாடசாலையை பொறுப்பேற்ற திரு.இராஜரட்ணம் ஆசிரியர்களுடன் இணைந்து க.பொ.த(சாஃத) பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தினார். ஸ்ரீ Æகணே~h தமிழ் வித்தியாலயம் என்று பாடசாலையின் பெயரை மாற்றி பாடசாலை முன்னேற்றத்திற்கு படிகல்லாக விளங்கினார். 1998ம் ஆண்டில் முதன்முதலில் க.பொ.த(சாஃத)பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். 2022ம் ஆண்டின் இறதியில் சுமார் 3 மாத காலமாக முறையாக ஒருவர் நியமிக்கப்படாது. சற்றே தடம் மாறிய இப்பாடசாலையை இதே பாடசாலையின் பழைய மாணவரான எஸ்.இலட்சியராஜா பொறுப்பேற்றார்.தொடர்ந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைஇக.பொ.த சாஃத வரை சித்தியடைந்து உயர்தரம் அனுப்பி பல்கழைக்கழகம் வரை செல்ல வழி கோலியது.